இங்கிலாந்தில் கடைசி நிகழ்ச்சி – மகுடத்தை துறந்து கனடா பறந்த ஹாரி

இங்கிலாந்து இளவரசர் பட்டத்தை துறந்த ஹாரி, அந்நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு சென்றுள்ளார்.

இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்தனர். தாங்கள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேரத்தைச் செலவிட நினைப்பதாகவும் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பதவி விலகினாலும் ஹாரி இன்னும் இளவரசர் தான்; ஆனால்….! மேகனின் நிலைமை?

ஹாரி – மேகன் தம்பதி தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், ராணி எலிசபெத்தும் இதற்கு அனுமதி அளித்தார். இவர்கள் கனடாவில் தங்கி வாழ உள்ளனர். மேகன் ஏற்கனவே கனடா சென்று விட்ட நிலையில், ஹாரி மட்டுமே பக்கிங்காம் அரண்மனையில் தங்கி இருந்தார். இந்நிலையில், ஹாரியும் கனடா புறப்பட்டு சென்றுள்ளார்.

கனடா புறப்பட்டு செல்வதற்கு முன்பாக, இங்கிலாந்து இளவரசராக லண்டனில் நடந்த இங்கிலாந்து-ஆப்ரிக்கா முதலீட்டு மாநாட்டில் ஹாரி கடைசியாக கலந்து கொண்டார். அப்போது, மலாவி, மொசாம்பிக் மற்றும் மொராக்கோ பிரதமர்களை அவர் சந்தித்து பேசினார். மேலும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தனிப்பட்ட முறையில் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார். மாநாட்டில் நடந்த விருந்தையும் அவர் தவிர்த்து விட்டார். இதனை தொடர்ந்து, கனடாவில் உள்ள வான்கோருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மனைவி மேகன், மகன் ஆர்ச்சியுடன் புதிய வாழ்க்கையை ஹாரி தொடங்கினார்.

அப்பவே அப்படி! calamityக்கும் catastrophyக்கும் புது அர்த்தம் கற்பித்த வின்ஸ்டன் சர்ச்சில்