பதவி விலகினாலும் ஹாரி இன்னும் இளவரசர் தான்; ஆனால்….! மேகனின் நிலைமை?

இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்தனர். தாங்கள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேரத்தைச் செலவிட நினைப்பதாகவும் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்பவே அப்படி! calamityக்கும் catastrophyக்கும் புது அர்த்தம் கற்பித்த வின்ஸ்டன் சர்ச்சில்

இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் கூட தெரிவிக்காமல் இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. அரச குடும்பத்தை விட்டு வெளியேற ஹாரியின் அண்ணன் வில்லியம்ஸ், மேகனின் சொந்த ஊர்தான் காரணம் எனப் பல தகவல்கள் ஊடகங்களில் கசிந்தவண்ணம் இருந்தன. இதற்கிடையில் கடந்த வாரம் இளவரசர் ஹாரியை நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் ராணி எலிசபெத். அதன் முடிவில் ஹாரியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் அரசக் குடும்பத்தைவிட்டு வெளியேற ஒப்புதல் தருவதாகக் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஹாரி -மேகன் தம்பதி தங்களின் மீதமுள்ள வாழ்நாளை கனடாவில் கழிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். மேகன் அமெரிக்காவில் நடிகையாக இருந்ததிலிருந்தே அவருக்கும் கனடாவுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்ததால் இருவரும் அங்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணி எலிசபெத் வெளியிட்டுள்ள அறிக்கை கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, இனிமேல் ஹாரி மற்றும் மேகன் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பு இதில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக அமைந்துள்ளது.

அந்த அறிக்கையில் “ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி ஆகிய மூவரும் எப்போதும் இங்கிலாந்து குடும்பத்தின் விருப்பமானவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் அனுபவித்த பல சவால்களை நான் உணர்கிறேன். மேலும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன். குறிப்பாக மேகனை நான் மிகவும் பாராட்டுகிறேன். இங்கு வந்த சில நாள்களிலேயே அரசக் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் வியக்க வைக்கும் தனி நபரின் வருமானம்

ஹாரி தொடர்ந்து இளவரசராக இருக்கலாம். வட அமெரிக்காவில் அவர்கள் தொடங்கவுள்ள புது வாழ்க்கையில் டியூக், டச்சஸ் ( Duke and Duchess) பட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் வருங்காலத்தில் அரச நிகழ்வுகள், அரசக் குடும்பம் சார்ந்த சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்ள முடியாது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இது அரசக் குடும்பத்திலிருந்து பதவி விலகுவது என்ற பொருள்படும் எனக் கூறப்படுகிறது. ஹாரி – மேகன் தம்பதிக்குச் சிறந்த முடிவை ராணி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Ind vs SL 2nd t20: பிரிட்டனில் ரசிகர்கள் இப்போட்டியை டிவியில் பார்ப்பது எப்படி?

Web Desk

மோசமான உணவுப் பழக்கம் கொரோனா உயிரிழப்புக்கு காரணம் – இங்கிலாந்து வாழ் இந்திய மருத்துவர்

Web Desk

UK Weather Warning: இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை – முழு விவரம் இங்கே

Web Desk