தடுப்பூசி வந்தாலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மார்ச் வரை காத்திருக்க வேண்டும்! – மெட் ஹென்காக்

allow return life, இயல்பு, இயல்பு வாழ்க்கை, தடுப்பூசி
(Image: PA Media)

தடுப்பூசி வந்தாலும் இங்கிலாந்து மக்கள் தங்களின் பழைய இயல்பு நிலைக்குத் திரும்ப மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும், அது வரை கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று மெட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

டெலிகிராஃப் இதழுக்கு சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “தடுப்பூசி போடப்படுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வசந்த காலம் தொடங்கும் (மார்ச் மாதம்) வரை காத்திருக்க வேண்டும்.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த தடுப்பூசிக்கு விரைவாக அனுமதி அளித்திருப்பதன் மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் பாதிப்பை சந்தித்து வரும் இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையை உயர்த்த முடியும்.

மிக ஆரம்ப நிலையிலேயே தடுப்பூசியை பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டுப்பாடுகள் விரைவில் முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதுவரை நாம் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நாம் நம்முடைய உதவியை வழங்க வேண்டும்” என்றார்.

இங்கிலாந்தில் வருகிற செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசி போடப்படும் சூழலில் கொரோன உயிரிழப்பு குறைந்து வருவது ஆறுதலைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போட்டுக்கொள்ள 80 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இதற்காக 50 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் தொற்றுநோய்க்கு வாய்ப்புள்ளவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட்டப்பட்டுவிடும் என்று இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்தில் ஞாயிறு காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 17,272 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 231 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை உயிரிழப்பு 397 ஆக இருந்தது. 15,539 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter