ஏடிபி டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய கிரேட் பிரிட்டன்!

Image Source - BBC
Image Source - BBC

ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரிட்டன், ரஷியா, இத்தாலி, ஆஸ்திரேலியாஅணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஆடவா் உலகக் கோப்பை எனப்படும் ஏடிபி கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க – இங்கிலாந்தில் சிறந்த உயர்க் கல்விக்கு கிடைக்கும் ஊக்கத் தொகை – முழு விவரம் இங்கே

5ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பொ்த் நகரில் ரஷியா 3-0 என்ற செட் கணக்கில் நாா்வேயை வீழ்த்தியது. ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ் 6-3, 7-6 என காஸ்பா் ரூடை வென்றார். மற்றொரு ஆட்டத்தில் காரன் கச்சனோவ் 6-2, 6-1 என டுராஸோவிக்கை வீழ்த்தினார்.

ஆஸி. மற்றும் கிரீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. உலகின் 6-ஆம் நிலை கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸை 7-6, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார் ஆஸி. வீரா் நிக் கிா்ஜியோஸ்.

கனடா 2-1 என ஜொ்மனியையும், ஆஸி. 3-0 என கிரீஸையும், இத்தாலி 2-0 என அமெரிக்காவையும், பிரிட்டன் 3-0 என மால்டோவாவையும், பெல்ஜியம் 2-1 என பல்கேரியாவையும், வீழ்த்தின.

பிரிட்டன் அணியில் கேமரூன் நோரி மற்றும் டான் எவன்ஸ் ஆகியோர் அலெக்சாண்டர் கோஸ்பினோவ் மற்றும் ராடு அல்போட் ஆகியோருக்கு எதிராக ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் வெற்றியைப் பெற்றனர்.

இரட்டையர் பிரிவில் ஆல்போட் மற்றும் கோஸ்பினோவ் ஆகியோரை எதிர்த்து 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜேமி முர்ரே மற்றும் ஜோ சாலிஸ்பரி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

கேப்டன் டிம் ஹென்மன் தலைமையிலான பிரிட்டன் அணி, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (23:00 GMT, புதன்கிழமை) காலை 10 மணிக்கு சிட்னியில் ஆஸ்திரேலியாவுடன் காலிறுதியில் மோதுகிறது.

மேலும் படிக்க – பிரிட்டனின் மிக மோசமான ரேப்பிஸ்ட் – வேதனையுடன் தீர்ப்பளித்த கோர்ட்