நான்கு வார முழு ஊரடங்கை அறிவித்தார் போரிஸ் ஜான்சன்! – வியாழன் அமலுக்கு வருகிறது

national, Covid, lockdown, ஊரடங்கை, போரிஸ் ஜான்சன், கொரோனா
(Image: tamilmicset.com)

இங்கிலாந்தில் நான்கு வார ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். வியாழக்கிழமை இது அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நான்கு வார ஊரடங்கை அவர் அறிவித்தார்.

புதிய ஊரடங்கு பற்றிய சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், அங்கு செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்பட்டு, புதன் கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும், வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வருகிற வியாழக்கிழமை அமலுக்கு வரும் ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலை இழப்பைத் தடுக்க வழங்கப்படும் ஃபோர்லாக் ஸ்கீம் வருகிற டிசம்பர் வரை நீட்டிக்கப்படும். 80 சதவிகிதம் அளவுக்கு சம்பளம் வழங்கப்படும்.

பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் மூடப்படும். அதே நேரத்தில் டேக் அவே மற்றும் டெலிவரி சேவை தொடரும்.

சர்வதேச பயணங்கள் தடை செய்யப்படும்.

அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடப்படும்.

சூப்பர் மார்க்கெட் வழக்கம் போல செயல்படும். அவைகள் வழக்கம் போல விரும்பியதை விற்பனைக்கு வைக்கலாம். எனவே, மக்கள் பொருட்களை வாங்கி வைக்க வேண்டிய தேவை இல்லை.

உடற்பயிற்சி செய்யலாம்.

உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்” என்றார்.

மேலும் இந்த பாதிப்பு பற்றி போரிஸ் ஜான்சன் பேசுகையில், “இயற்கையின் பாதிப்பை நாம் தாழ்மையுடன் எதிர்கொள்ள வேண்டும். ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் போலவே இங்கிலாந்திலும் சூழ்நிலை மோசமாகி வருகிறது.

நாம் இப்போது செயல்படாவிட்டால் ஒரு நாளைக்கு பல ஆயிரம் இறப்புக்களைக் காண வேண்டியிருக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மிகப்பெரிய அளவில் இறப்பு விகிதம் இருக்கும்.

யாருடைய உயிரைக் காப்பாற்றுவது என்பதை தேர்வு செய்யும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்படுவார்கள். நாடு முழுக்க லட்சக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்படும்.

நாட்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் காக்க டிசம்பர் 2ம் தேதி வரை முழு ஊரடங்கு கொண்டு வரப்படுகிறது.

அடுத்த ஆண்டில் நம்மிடம் கொரோனா வைரசுக்கு எதிரான சிறப்பான மருந்து, சிகிச்சை, தடுப்பூசி இருக்கும் என்பது இல்லை… ஆனால் நம்மிடம் அதிவிரைவான பரிசோதனைகள் இருக்கும்.

நீங்கள் 10-15 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் நிலை வரும். இதன் மூலம் நோய்த் தொற்றை மிகப்பெரிய அளவில் குறைக்கலாம்.

அடுத்த சில வாரங்களில் பரிசோதனை முறை முன்னேற்றத்துக்கான நிலையான அதே நேரம் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.

வீட்டிலேயே இருங்கள்… என்.ஹெச்.எஸ்-ஐ பாதுகாத்திடுங்கள்… உயிரைக் காத்திடுங்கள்” என்றார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter