கிறிஸ்மஸ் முதல் கொரோனா தடுப்பூசி… அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் மெட் ஹென்காக்?

covid, vaccine, distributed, தடுப்பூசி
மெட் ஹென்காக் (Image: Youtube)

கிறிஸ்துமஸ் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்குது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்தில் நான்கு வார ஊரடங்கு அமலில் உள்ளது. கிறிஸ்துமஸ் நேரத்திலாவது ஊரடங்கு இல்லாமல் மக்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். இருப்பினும், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே ஊரடங்கு தளர்வு என்பது அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் தடுப்பூசி மீது உள்ளது. தடுப்பூசி வந்துவிட்டால் கொரோனா அச்சமின்றி நடமாடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் இறுதியில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எப்போது, யாருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்பதை அரசுதான் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் பாக்ஸிங் டே நேரத்தில் குடும்ப மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கான அறிவிப்பை சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் அடுத்த வாரம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

பொது மருத்துவர்கள் (குடும்ப மருத்துவர்கள்) காலை 8 மணி முதல் இரவு எட்டு மணி வரை தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வார்கள்.

பொது மருத்துவர்களுக்கு உதவும் வகையில் 3000 நடமாடும் குழுக்களும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

முதல் கட்டமாக நகர்ப்பகுதிகளில் உள்ள பொது மருத்துவர்கள் மூலமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து மக்களுக்கு தடுப்பூசி போட ஒரு கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே ஒரு கோடி தடுப்பூசிகளும் வந்துவிடும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் பொது மருத்துவர்கள் பிஸியாக இருப்பார்கள் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன் ஜிபி கமிட்டி தலைவர் ரிச்சர்ட் உத்ரே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter