மாஸ்க் அணிவதில் செய்யும் சிறு தவறும் கொரோனாவுக்கு வழிவகுத்துவிடும்! – சுகாதார பணியாளர்கள் எச்சரிக்கை

மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக நடக்கும் பெண்கள். (Image: Julian Hamilton/Daily Mirror)

இங்கிலாந்தில் கடந்த வாரம் முதல் கடைகளுக்குள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் தவறான நிலையில் மாஸ்க் அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்வது கொரோனாவுக்கான வாய்ப்பை அதிகரித்துவிடும் என்று சுகாதாரப் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கடைகளுக்குள் மாஸ்க் அணிய வேண்டும், ஸ்பெயினுக்கு சென்றுவிட்டு நாடு திரும்புகிறவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக வேண்டும் என்று அரசு கூறியிருப்பது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு தங்கள் கண்டனங்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

முகக் கவசம் என்பது நம்மை பாதுகாக்கும் ஒரு கருவி. கொரோனா வைரஸ் நம்முடைய வாய் மற்றும் மூக்கு வழியாகவே நுழைகிறது. இதைத் தடுக்கவே மாஸ்க் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, நம்முடைய வாய் மற்றும் மூக்கு பகுதியை நாம் சரியாக மூடியுள்ளோமா என்று சரி பார்க்க வேண்டியது அவசியம். முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதை சரியாக பின்பற்றுவது இல்லை. இது குறித்து சுகாதாரப் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Wearing a mask on public transport

When travelling on public transport, it's important that you remember to wear a mask. This will help to protect both you and others.

Posted by East Midlands Ambulance Service on Tuesday, July 21, 2020

ஈஸ்ட் மிட்லாண்ட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் இது தொடர்பாக ஒரு வரைபடம் மற்றும் புள்ளிவிவரத்தை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. அதில் பலரும் மாஸ்கை இழுத்து தொண்டைப் பகுதியில் வைத்துவிட்டு வெளியே சுற்றுகின்றனர். ஒருவருடன் பேசும்போது மட்டும் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர்.

அப்படி பேசும்போது கொரோனா வைரஸ் பரவினால் அது நம்முடைய தொண்டைப் பகுதியில் தங்கும் வாய்ப்பு அதிகம். மாஸ்கை நாம் கீழே இறக்கும்போது எளிதாக நம்முடைய வாய், மூக்குக்கு வைரஸ் பரவிவிடும். எனவே, சரியான நிலையில் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

சாப்பிடும் இடத்தில் மாஸ்க்கை எப்படி வாயில் மாட்டிக்கொண்டு சாப்பிடுவது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்கள், உணவகத்தில் சாப்பிடுவது என்று முடிவு செய்துவிட்டால், சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் அதை கழற்றி பத்திரமாக வைத்திருங்கள். அதைவிடுத்து நாடி, கழுத்துப் பகுதியில் இறக்கிவிடுவது தவிர்திடுங்கள் என்று கூறியுள்ளது. அதே போல் தரமான மாஸ்க் அணியுங்கள் என்று சுகாதாரப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk