லண்டன்: 16 வயது சிறுமியை கடத்த முயன்றவன் இவன்தான்! – புகைப்படத்தை வெளியிட்ட போலீஸ்

suspected, kidnap, Bexley

டகிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் 16 வயது சிறுமியை கடத்த முயன்றது தொடர்பாக தேடப்படும் குற்றவாளியின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பெக்ஸ்லிஹீத்தில் கடந்த மாதம் (ஜூன்) 25ம் தேதி அப்டன் சாலையின் அருகாமையில் இருந்த 16 வயது சிறுமியை இரவு 10.30 மணி அளவில் ஒரு மர்ம நகர் கடத்த முயற்சி செய்துள்ளார். சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமியின் பின்புறமாக வந்து அவரைப் பிடித்து கடத்த முயன்றார். அந்த சிறுமி கூச்சலிடவே வேறு வழியின்றி அந்த நபர் கால்நடையாக பெக்ஸ்லிஹீத் பிராட்வே நோக்கி ஓடிச் சென்று தப்பித்தார்.

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை செய்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் சிறுமியை கடத்த முயன்ற நபரின் புகைப்படத்தை மெட்ரோபாலிடன் போலீஸ் வெளியிட்டுள்ளது. அந்த நபர் வெள்ளை நிறத்தவர், கறுப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார். சம்பவத்தன்று அந்த நபர் முகக் கவசத்தை தன்னுடைய முகத்தின் நாடிப்பகுதி வரை இழுத்துவிட்டிருந்தார். அவருடைய புகைப்படம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள புலனாய்வு கான்ஸ்டபிள் டிரிஸ்டன் ஹண்டர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் ரீதியாக எந்த காயமும் இல்லை. ஆனால், அந்த நபர் திடீரென்று பின்னால் இருந்து பிடித்ததில் பயம் காரணமாக மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார். இந்த நபர் பற்றிய தகவல் தெரிய வந்தால் எங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்த நபர் பற்றிய விவரம் யாருக்காவது தெரிந்தால் அவர்கள் 101ஐ அழைக்கலாம். தகவல் தெரிவிப்பவர் பற்றிய ரகசியம் காக்கப்படும் என்று மெட்ரோபாலிடன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk