கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – மிடில்ஸ்பரோ மேயர் அதிரடி!

Andy Preston Mayor
(Image: Twitter)

லண்டன், அக்டோபர் 1, 2020: கொரோனா கட்டுப்பாடுகள் லிவர்பூல், மிடில்ஸ்பரோ உள்ளிட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்டள்ள நிலையில் அரசு தங்கள் தரப்பு கருத்தைக் கேட்கவில்லை என்று மிடில்ஸ்பரோ மேயர் பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால் அரசு அதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று பிரதமர், சுகாதாரத் துறை செயலாளர், அறிவியல் ஆலோசகர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பிரதமர், நாடு மிகவும் சிக்கலான தருணத்தில் உள்ளது. மீண்டும் ஒரு முழு ஊரடங்கை கொண்டு வர விரும்பவில்லை.

அதே நேரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் இன்று மக்களவையில் வடகிழக்கு மற்றும் லிவர்பூல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விரிவாக்கம் செய்யப்படுவது பற்றிய தகவலை வெளியிட்டார். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஹென்காக் அறிவிப்பின் படி,

வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் சமூக ஒன்று கூடல் அது வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ தடை செய்யப்படுகிறது.

தடையை மீறி வேறு வீடுகளுக்கு சென்று சந்திப்பவர்களுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கத் தடை.

மிக அவசியம் என்றால் மட்டுமே கேர் ஹோம்களுக்கு செல்லலாம். மற்றபடி அங்கு செல்ல தடை.

வேலை, கல்வி போன்ற அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி.

பால்டன் பப்கள் டேபிள் சர்வீஸ் செய்ய அனுமதி என்பனவை ஆகும்.

அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு மிடில்ஸ்பரோ மேயர் ஆன்டி பிராஸ்டன் மேயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

அரசாங்கத்துடன் பேச நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், அரசு எங்களுக்கு செவிசாய்க்கவில்லை.

அவர்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். இது வேலை மற்றும் மக்களின் மன ஆரோக்கியத்தை அழித்துவிடும்.

அரசாங்கத்தின் நோக்கம் கொண்ட கட்டுப்பாடுகளை நான் ஏற்கவில்லை – அவை அறியாமையை அடிப்படையாகக் கொண்டவை” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter