இரண்டு பெண்களை கொன்று, ப்ரீசரில் மூன்று ஆண்டு வைத்திருந்த கொலைகாரன்… நீதிமன்ற விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொலை செய்யப்பட்ட பெண்களின் படம். (Image: Central News)

இரண்டு பெண்களை கொலை செய்த கொலைகாரன் ஒருவன்,  உடலை  மூன்று ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்தது தொடர்பான அதிர்ச்சித் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையின் போது வெளியாகி வருகிறது.

ஹென்றிட் சுன்ஸ் (34) கடந்த 2016ம் ஆண்டு ஸாஹித் யூனுஸ் (35) என்பவருடன் வெளியே சென்றார். அதன் பிறகு அந்த பெண் என் ஆனார் என்றே தெரியவில்லை. அதே போல் 2018ம் ஆண்டு மிஹ்ரிகன் முஸ்தபா என்ற 38 வயதான பெண் கிழக்கு லண்டனில் உள்ள கேனிங் டவுனில் உள்ள ஸாகித் யூனுஸ் வீட்டுக்கு சென்றதற்குப் பிறகு காணாமல் போனார். இந்த இரு பெண்களும் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் காணாமல் போனவர்களாக தேடப்பட்டு வந்தனர்.

விசாரணையில் ஸாகித் யூனஸ் மீது சந்தேகம் ஏற்படவே அவனது வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவனது வீட்டில் இருந்த ஃப்ரீசரில் பெண்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சோதனையிட வந்த போது, இது என் வீடு, இது என்னுடைய பிரச்னை… இதில் உங்களுக்கு என்ன… யாரும் இதில் தலையிடத் தேவையில்லை என்று போலீசாரிடம் சண்டைக்கு நின்றுள்ளான் கொலைகாரன். போலீசிஸ் விசாரணையின்போதும் இதையே திரும்பத் திரும்ப கூறி வந்துள்ளான்.

தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் சவுத்வாக் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட யூனுஸ் மீது அரசு தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், வீட்டுக்கு சோதனை செய்ய சென்ற போது இரு இடத்தில் ஈக்கள் தொந்தரவு அதிகமாக இருந்தது. அந்த இடத்தை சோதனையிட்ட போது ஃப்ரீசர் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது, உடல் முழுக்க காயங்களுடன், எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் உடல்களின் எச்சம் கண்டறியப்பட்டது.

அந்த பெண்களின் உடலை ஆய்வு செய்தபோது, அவர்கள் மிகக் கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு, பலமாக அடிக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக. அந்த பெண்கள் இயற்கையான முறையில் இறக்கவில்லை. சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டில் கிடந்த உடல்களின் எச்சம், தரையில் சிந்தியிருந்த உலர்ந்த ரத்தம், இரண்டு பெண்களின் செல்போன் எண்ணும் கடைசியில் யூனுஸ் வீட்டுக்கு வந்த பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது என ஆதாரங்கள் எல்லாம் சரியாக இருப்பதால் இதை யூனுஸ்தான் செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு கொலைகளையும் தான் செய்யவில்லை என்று யூனுஸ் மறுத்து வருகிறார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று செய்தி வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk