பணத்துக்காக உறவினரைக் கொலை செய்து, உடலை வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர்!

Derbyshire, கொலை
(Image: Derbyshire Police / SWNS/Google)

போதை மற்றும் சூதாட்டத்திற்காக தன்னுடைய வயதான உறவினரை கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி விலங்குக்கு வீசிய இளைஞர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

டெர்பிஷையரில் உள்ள செஸ்டர்ஃபீல்டில் வசித்து வந்தவர் 71 வயதான கிரகாம் ஸ்னெல். மாத ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார்.

இவரது பணத்தை உறவினர் டேனியல் வால்ஷ் (30) எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். போதை மருந்து வாங்குவது, சூதாட்டத்தில் ஈடுபடுவது, மசாஜ் பார்லர் செல்வது என்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் டேனியல் வால்ஷ்.

இதை அறிந்த கிரகாம், தன்னுடைய பணத்தை உறவினர் டேனியல் திருவது பற்றி போலீசில் புகார் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டேனியல், வயதான முதியவர் என்றும் பாராமல் கிரகாமை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டாக்ஸி ஒன்றை வாடகைக்கு வைத்து டிஐஒய் ஷாப்புக்கு சென்றுள்ளார். அங்கு கையால் மரம் அல்லது உலோகத்தை அறுக்கப் பயன்படும் ரம்பம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர் கிரகாமை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக வெட்டி அதை பேட்ஜர் எனப்படும் ஒருவகை விலங்குக்கு உணவாக வீசியுள்ளார். மிச்சம் மீதியைத் தான் முன்பு வசித்த வீட்டுக்கு அருகே இருந்த குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.

கிரகாமை தேடிய போலீஸ்…

அதன் பிறகு கிரகாம் காணவில்லை என்பதால் போலீசார் தேடியுள்ளனர். அதற்கு டேனியல், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறி சமாளித்துள்ளார்.

இதற்குள்ளாக நாட்டைவிட்டு வெளியேற அவர் முயற்சி செய்ததும் காவல்துறைக்குத் தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கிரகாமின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியதாக கூறினார். ஆனால், தான் கொலை செய்யவில்லை என்று சாதித்துள்ளார்.

சம்பவம் நடந்த போது கிரகாம் ஸ்னெல் அளவுக்கு அதிகமாகக் குடித்து  கழிப்பறையில் விழுந்து உயிரிழந்ததாக டேனியல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தான் ஏற்கனவே கோகைன் போதை மருந்து எடுத்திருந்ததால் தான்தான் கொலை செய்தேன் என்று போலீசார் சந்தேகப்படுவார்கள் என்பதால் கிராமின் உடலை வெட்டி அப்புறப்படுத்தினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை படிச்சீங்களா: கிறிஸ்துமஸ் கொரோனா கட்டுப்பாடு தளர்வு பல உயிர்களை பலி வாங்கிவிடும்… மருத்துவ இதழ்கள் எச்சரிக்கை!

கிரகாமின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி விலங்குக்கு வீசியதால் முழு உடலையும் போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

தலை எங்கே வீசப்பட்டது என்பதை கூறவே டேனியல் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டார். இருப்பினும் நடந்தது என்ன என்பதை போலீசார் நன்கு அறிந்திருந்தனர்.

டேனியல்தான் இந்த கொலையை செய்தார் என்பதை கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உறுதி செய்தது.

தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தன்னுடைய சட்ட நிபுணரை நீக்குவதாக டேனியல் அறிவித்தார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்த அவர், நீதிமன்ற நடவடிக்கையில் தான் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து புதிய சட்ட நிபுணரைத் தேர்வு செய்ய ஜனவரி 4ம் தேதி வரை அவகாசம் அளித்த நீதிபதி, இன்றைய தினமே கொலை வழக்கில் தீர்ப்பை வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter