நள்ளிரவில் நம்பி வந்த தோழியை பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்! – குற்றவாளி என அறிவிப்பு

Keeley Bunker
கொலை செய்யப்பட்ட கீலி பங்கர். (Image: Staffordshire Police)

தன்னுடைய 20வது பிறந்த நாளின்போது தன்னை நம்பி வந்த தன் குழந்தைப் பருவ காலத்தில் இருந்து தோழியாக இருந்தவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் இளைஞர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

பர்மிங்காமைச் சேர்ந்தவர் கீலி பங்கர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய 20வது பிறந்த நாளை, தன்னுடைய குழந்தைப் பருவ காலத்தில் இருந்து நண்பராக இருந்துவந்த வெஸ்லி ஸ்ட்ரீட் என்பவருடன் இணைந்து கொண்டாடினார். ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருவரும் நடனமாடி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

இரவு நேரமாக இருந்தாலும் தன்னுடைய பால்ய நண்பன்தானே என்று நம்பி அந்த இளம் பெண் பிறந்த நாளைக் கொண்டாட வந்துள்ளார். ஆனால், அடுத்த நாள் முதல் அந்த பெண்ணைக் காணவில்லை என்று தேடினர். செப்டம்பர் 19ம் தேதி ஓடை அருகே உள்ள பூங்காவில் ஒரு மரத்தின் கீழ் கீலி பங்கரின் உடலை அவரது உறவினர்கள் கண்டறிந்தனர்.

இந்த கொலை விவகாரம் தொடர்பாக வெஸ்லி ஸ்ட்ரீட் கைது செய்யப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் இருந்து அவர் தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என்று சாதித்து வந்தார். தற்போது நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.

பிறந்த நாள் கொண்டாட்டம், நடனம், கேளிக்கைக்குப் பிறகு பங்கர் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். ஆனால், வெஸ்லி அவரை தடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இளம் பெண்ணின் உடலை மரத்தின் அடியில் வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல சென்றுவிட்டார்.

அடுத்த நாள் போலீஸ் விசாரிக்கும்போது, பங்கர் தனியாக தன்னுடைய வீட்டுக்குச் சென்றார் என்று கூறினார். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தபோது விக்கின்டன் பூங்காவில் இருவரும் விரும்பி உடலுறவு கொண்டோம். அப்போது எதிர்பாராத விதமாக கொலை நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்டாஃபோர்டுஷையர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செரில் ஹன்னன் கூறுகையில், “தன்னுடைய தோழி காணாமல் போனது பற்றி வெஸ்லி ஸ்ட்ரீட் முன்னுக்குப் பின் மாற்றி மாற்றிப் பேசியது சந்தேகத்தை அதிகரித்தது. ஆனால், விசாரணை அதிகாரிகளை வெஸ்லி குற்றம்சாட்டி தான் ஒரு நியாயவாதி போல காட்டிக்கொள்ள முயற்சி செய்தார்.

கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட வெஸ்லி ஸ்ட்ரீட். (Image: Staffordshire Police)

இந்த இளைஞர் மீது நம்பிக்கை வைத்து கீலி இரவில் அவருடன் நடந்து சென்றுள்ளார். ஆரம்பத்தில் இருந்து அவர் சொன்ன பொய்கள், அந்த பெண் காணாமல் போனதற்கும் இவருக்கும் தொடர்பு இருக்கும் என்பதை உணர்த்தியது. அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பிறகு கொலை செய்யப்பட்டது உறுதியானது. அந்த இளம் பெண்ணின் கழுத்தில் இருந்த காயங்கள் வெஸ்லியிடம் இருந்து தப்பிக்க அவர் முயற்சி செய்ததைக் காட்டிக் கொடுத்தது” என்றார்.

கடைசியில் உண்மை வெளிப்பட்டதும் கொலை செய்ததையும், உடலை மறைக்க முயற்சி செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ஸ்டாஃபோர்டு கிரவுன் நீதிமன்றம் வெஸ்லியை குற்றவாளி என்று அறிவித்துள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk