கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறியதால்தான் இந்த நிலை! – மக்கள் மீது பாய்ந்த நீதித்துறை செயலர்

Minister blames public, மக்கள், ஊரடங்கு, கொரோனா, கட்டுப்பாடு
(Image: REUTERS)

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் மீறியதால்தான் நான்கு வார முழு ஊரடங்கு நிலை ஏற்பட்டுள்ளது என்று நீதித்துறை செயலர் ராபர்ட் பக்லேண்ட் தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து முழுவதும் கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்கள், பார்கள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உணவு விநியோகிக்க, டெலிவரி செய்ய தடை இல்லை.

ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறினால் அவர்களுக்கு அபராத தொகை இரட்டிப்பாகிக் கொண்டே செல்லும். அதிகபட்சமாக 6,400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும்.

இதுவே மிகப்பெரிய ஒன்று கூடலை வீடு அல்லது வேறு எந்த ஒரு இடத்திலும் கூட்டினால் அவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும்.

பணியாளர்களுக்கு 80 சதவிகித ஊதியம் கிடைக்கும் வகையிலான ஃபோர்லாக் ஸ்கீம் வருகிற மார்ச் வரை நீட்டிக்கப்படுவதாக நிதித்துறை அதிபர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

எனவே, அனைத்து தரப்பினரும் முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி ஒத்துழைப்பு தர மறுப்பவர்களுக்கு அபராதம் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் சட்டத் துறைச் செயலர் ராபர்ட் பக்லேண்ட் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

முந்தைய முறைகளை மக்கள் கடைப்பிடிக்கத் தவறிவிட்டதால் இந்த நான்கு வார ஊரடங்கு அவசியமாகிவிட்டது. இதுவே இன்றைய நிலைக்கு காரணம்.

குவாரன்டைன் விதிமுறைகளை மீறி ஏராளமானவர்கள் பொது இடங்களுக்கு வந்தனர். ஒவ்வொரு சூழலிலும் போலீஸ் உள்ளிட்ட சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் வந்து கண்காணிப்பது என்பது சாத்தியமில்லை.

இருப்பினும் தற்போதைய நிலையில் தீவிரமான தலையீடு தேவைப்பட்டால் போலீஸ் தலையிடும். சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter