இன்று நள்ளிரவு முழு ஊரடங்கு தொடங்குகிறது… நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

PM, England, lockdown, போரிஸ் ஜான்சன், முழு ஊரடங்கு

இங்கிலாந்தில் நான்கு வார ஊரடங்கு கொண்டு வருவதற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை காலை 12.01க்கு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து 2ம் முழு ஊரடங்குக்கான அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார்.

டிசம்பர் 5ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முழு ஊரடங்குக்கான ஒப்புதலை பெற நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஊரடங்குக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன.

மொத்தம் உள்ள 516 உறுப்பினர்களில் 478 பேர் ஊரடங்குக்கு ஆதரவாக வாக்களித்தனர். டோரி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அக்கட்சியின் 34 உறுப்பினர்களும், லேபர் உறுப்பினர்களும் என சேர்த்து மொத்தம் 38 வாக்குகள் ஊரடங்குக்கு எதிராக விழுந்தது.

டோரி கிளர்ச்சியாளர்களுள் முக்கியமானவர்கள் முன்னாள் தலைவர் சர் ஐயன் டங்கன் ஸ்மித், சர் கிரஹாம் பிராட்டி உள்ளிட்டோர் அடங்குவர். முன்னாள் பிரதமர் தெரசா மே வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

முன்னதாக நடந்த விவாதத்தின் போது கன்சர்வேட்டி கட்சியின் கிளர்ச்சியாளர்கள் மற்றும் வட மேற்கு இங்கிலாந்தின் சில லேபர் கட்சி எம்.பி-க்கள் ஊரடங்குக்கு எதிராக பேசினர். இரண்டு வாரங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட மூன்று நிலை ஊரடங்கு வெற்றிபெற்றதா இல்லையா என்பதை அறிய போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றனர்.

முன்னாள் பிரதமர் தெரசா மே பேசும் போது, லிவர்பூல் நகரில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துகொண்டே வருவதை ஆதாரமாக சுட்டிக்காட்டி பேசினார். மேலும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கொள்கைக்கு ஏற்ப புள்ளிவிவரங்களை வழங்குவதாக குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் கொரோனா ஊரடங்குக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் நாடு முழுக்க பப், ரெஸ்டாரண்ட்கள் மூடப்படுகின்றன. டேக் அவே, டெலிவரி மட்டுமே அனுமதிக்கப்படும்.

அத்தியாவசியமற்ற கடைகள், பொழுதுபோக்கு, ஓய்வு மையங்கள் மூடப்படும்.

வேலை மற்றும் கல்விக்காகவும் அவசர மருத்துவ சிகிச்சை பெறவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் மட்டுமே மக்கள் வெளியே நடமாடலாம்.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறந்திருக்கும்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு பரிசோதனை, சிகிச்சை என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் நான்கு வாரத்தில் நல்ல தீர்வை காணலாம்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter