லண்டன் மட்டுமில்லை நாடு முழுக்க மீண்டும் முழு ஊரடங்கு அவசியம்! – வலியுறுத்தும் மருத்துவ நிபுணர்கள்

National, lockdown, Christmas,ஊரடங்கு, கட்டுப்பாடு, கொரோனா
(Image: PA:Press Association)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நாடு முழுக்க முழு ஊரடங்கு அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் மூன்று நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவல் குறையவில்லை. ஒவ்வொரு பகுதியாக 3ம் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

மூன்றாம் நிலை கூட போதுமானதாக இல்லை, கூடுதல் கட்டுப்பாடுடன் நான்காம் நிலை என்ற ஒன்று வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் டிசம்பர் வரையில் நாடு முழுக்க 3ம் நிலை கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தேசிய அறிவியல் ஆலோசகர்கள் குழு இதை வலியுறுத்தி வருகிறது.

அப்படி செய்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே நிலை நீடித்தால் குளிர் காலத்தில் மட்டும் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை நாடு சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது தினசரி 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், முழு ஊரடங்கு என்பது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்பதால் அதைக் கொண்டு வர முடியாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொரோனாத் தொற்று தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. லண்டன் நகரில் 3ம் நிலை கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில் லண்டனும் 3ம் நிலைக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாட்டில் எல்லா வயதினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக டீன் ஏஜ் மற்றும் இளம் வயதினர் மத்தியில் தொற்று அதிகமாக உள்ளது.

இதனால் பப் உள்ளிட்டவற்றை மூட வேண்டும். உணவு சேவைத் துறைக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அரசின் அறிவியல் ஆலோசகர் குழு கூறியுள்ளது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தினர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு டிசம்பர் வரையில் நாடு முழு ஊரடங்கில் இருப்பது ஒன்றுதான் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே அரசின் கட்டுப்பாடுகளால் வெறுப்பான மனநிலையில் இருக்கும் மக்கள், அறிவியல் ஆலோசகர்களின் பரிந்துரையால் மேலும் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா: கொரோனா கட்டுப்பாடு ஏன் வருகிறது என்று கூட உணராமல் கேளிக்கையில் ஈடுபட்ட நாட்டிங்ஹாம் மக்கள்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter