150 பேரைக் கூட்டி வீட்டில் விருந்து கொண்டாடிய இளைஞருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம்!

Nottingham house party, விருந்து, கொண்டாட்டம், கோவிட்
(Image: Google Map)

நாட்டிங்ஹாமில் கட்டுப்பாடுகளை மீறி வீட்டில் 150க்கும் மேற்பட்டவர்களை அழைத்து விருந்து கொண்டாடிய 20 வயது இளைருக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

நாட்டிங்ஹாமில் உள்ள லேஸ் ஸ்ட்ரீட்டில் இன்று (7 டிசம்பர்) அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு வீட்டில் ஏராளமானவர்கள் கூடி கேளிக்கையில் ஈடுபட்டு வருவதாக நாட்டிங்ஹாம்ஷைர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து விருந்து நடைபெற்ற இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 150க்கும் மேற்பட்டோர் கூடி விருந்து கொண்டாடியது தெரியவந்தது.

அங்கு சட்ட விரோதமாக கூடியவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனர்.

அப்போது கென்ட், டார்ட்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்த ஏசாயா ஜனாம்வே (19) என்பவர் போலீசாரைத் தடுத்து அத்துமீறித் தாக்க முயற்சி செய்தார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஜனவரி 26 அன்று நாட்டிங்ஹாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ததாக 20 வயது இளைஞர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அவரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா: இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் அமேசான்!

இது தவிர விருந்தில் பங்கேற்ற பலருக்கும் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாட்டிங்ஹாம்ஷைர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எமி இங்கிலீஷ் கூறுகையில், “கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்களின் உயிரைக் காக்கவும் நாட்டிங்ஹாம்ஷைரில் தற்போது மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் இத்தனை பேர் ஒன்று கூடி விருந்து கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகள் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்கவே செய்யும்” என்றார்.

நாட்டிங்ஹாமில் மூன்றாம் நிலை கொரோனா கட்டுப்பாடு உள்ள நிலையில், 150க்கும் மேற்பட்டவர்களை அழைத்து இளைஞர் ஒருவர் பார்ட்டி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter