ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை தடுப்பூசி 70 சதவிகித பாதுகாப்பை மட்டுமே தருகிறது… 3ம் கட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Oxford vaccine protection, கொரோனா, தடுப்பூசி, AstraZeneca, Covid, vaccine
(Image: AFP image)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 70 சதவிகிதம் அளவுக்கே பாதுகாப்பை அளிப்பதாக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக அளவில் மிகக் கடும் போட்டி உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுவரை நடந்த ஆய்வுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் 95 சதவிகிதம் அளவுக்கு பாதுகாப்பை அளிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 70 சதவிகிதம் அளவுக்கே பாதுகாப்பு கிடைப்பது தெரியவந்துள்ளது.

ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் 95 சதவிகித அளவுக்கு பாதுகாப்பு கிடைப்பதாக அறிவித்துள்ள நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறைவு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

அதே நேரத்தில் மற்ற மருந்துகளைக் காட்டிலும் ஆக்ஸ்ஃபோர்டு தயாரித்துள்ள மருந்து விலைக் குறைவானது, உலகின் எந்த ஒரு மூளைக்கும் எளிதில் கொண்டு செல்லக் கூடியதாக உள்ளது.

இந்த மருந்துக்கு அங்கீகாரம் கிடைத்தால் அது மிகப்பெரிய அளவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தடுப்பூசியின் திறனை சற்று மாற்றி அமைப்பதன் மூலம் 90 சதவிகிதம் அளவுக்கு பலன் அளிக்கக் கூடியதாக இதை மாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசு ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை வாங்க அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளது. 10 கோடி யூனிட் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் 5 கோடி மக்களுக்கு நோய்த் தடுப்பை ஏற்படுத்த முடியும்.

மூன்றாம் கட்ட பரிசோதனைக்காக ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து, மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு போடப்பட்டது. இதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நூற்றுக்கு 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் ஹை டோஸ் போட்டவர்களில் 62 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அதே நேரத்தில் முதலில் ஹை டோசும் இரண்டாவது தவணையாக லோ டோசும் போடப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை.

ஏன் இந்த வேறுபாடு என்பது பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக தடுப்பூசி பரிசோதனை குழு தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் பிபிசி-க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter