குவாரன்டை தவிர்க்க முடியாதது… மன்னிப்பு கேட்க முடியாது! – வெளியுறவு செயலாளர் சொல்கிறார்

Foreign Secretary, Dominic Raab

ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பயணிகளுக்கு சுய தனிமைப்படுத்தல் விதி அசௌகரியத்தை அளிப்பதாக இருக்கலாம். ஆனால் இது தவிர்க்க முடியாத ஒன்று. அரசு மிக விரைவாக செயல்பட்டுள்ளது என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் மீண்டும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், ஸ்பெயின் நாட்டிலிருந்து இங்கிலாந்து வருபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது. முன் அறிவிப்பு இன்று இந்த அறிவிப்பு வந்துவிட்டது என்று எதிர்க்கட்சியும் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, “இந்த விவகாரத்தில் அரசு மிக விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. கோவிட் 19 தொடர்பான நாடு முழுவதும் வந்து கொண்டிருக்கும் புள்ளிவிவரங்களில் மிகப்பெரிய ஏற்றம் இருப்பதைக் காண முடிகிறது. இதைத் தொடர்ந்து மிக அவசரமாக சனிக்கிழமை மாலை இந்த முடிவு வெளியிடப்பட்டது. இதற்காக எல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை இல்லை. ஸ்பெயினில் அல்லது வேறு ஒரு நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாம் விரைவான, உறுதியான நடவடிக்கை, முடிவு எடுத்தாக வேண்டியுள்ளது. பாதுகாப்பான நாடுகள் பட்டியலிலிருந்து ஸ்பெயின் பெயர் நீக்கப்படுமா என்பது பற்றி உறுதியாக கூற முடியாது. இது தொடர்பாக எந்த ஒரு உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது.

இந்த கட்டாய சுய தனிமைப்படுத்தல் காரணமாக பாதிக்கப்படும் ஊழியர்களின் சம்பளங்களில் பிடித்தம் செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதற்கிடையே ஸ்பெயின் வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்பெயினில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. கொரோனா திடீர் பரவல் என்பது உள்ளூர் அளவில் உள்ளது, அங்கு கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல் போன்றவை தொடர்கிறது. அதே நேரத்தில் யு.கே-வின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk