தடையை மீறி சலூனைத் திறப்பு… 27 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதித்த உள்ளூர் நிர்வாகம்!

பவுண்ட், அபராதம், கொரோனா, Salon owner, Covid
(Image: Guzelian)

கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை மீறி சலூனை திறந்து வைத்த உரிமையாளருக்கு 27 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. டிசம்பர் 2ம் தேதி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜிம், சலூன், பியூட்டி பார்லர் உள்ளிட்ட அனைத்தும் டிசம்பர் 2ம் தேதி வரை கட்டாயம் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பிராட்ஃபோர்டுக்கு அருகே உள்ள ஒகென்ஷாவில் இயங்கி வரும் க்வின் பிளேக்கி சிகையலங்கார நிபுணர்கள் தங்களின் கடையைத் திறந்து வைத்துள்ளனர்.

முதலில் கடையைத் திறந்த போது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் கடையை மூடுவதாக இல்லை.

இதைத் தொடர்ந்து முதல் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு 2000ம் பவுண்ட் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடையை அவர்கள் திறந்து வைக்கவே 4000ம் பவுண்ட் என தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டது.

இன்றும் அந்த சலூன் திறக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்றும் கடை திறந்திருக்கவே உள்ளூர் நகர சபை நிர்வாகிகள் கடைக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதித்தனர். இதன் மூலம் அந்த சலூன் 27 ஆயிரம் பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும்.

இதைப் படிச்சீங்கலா: லண்டனில் மாஸ்க் போட சொன்ன ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பெண்ணால் அதிர்ச்சி!

நாடு முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதற்கு முன்பு பிராட்ஃபோர்டில் 3ம் நிலை ஊரடங்கு அமலில் இருந்தது.

இது குறித்து கிர்க்லீ கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தொடர்ந்து சலூன் திறக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு தற்போது கூடுதலாக 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 27 ஆயிரம் பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து விதிமுறைகளை அந்த சலூன் மீறி வருவதால் மாற்று வழிகள் பற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

மக்களைப் பாதுகாக்கத்தான் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அனைவரும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் என்று யாரும் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் இது போன்ற பிரச்னைகள் எழாது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter