முழு ஊரடங்கைக் கொண்டு வந்தால் அழிவு நிச்சயம்! – இங்கிலாந்து அரசுக்கு எச்சரிக்கை

second, national, lockdown, ஊரடங்கு
(Image: Time Magazine)

மீண்டும் ஒரு முழு ஊரடங்கு வந்தால் இங்கிலாந்தின் பொருளாதாரம் அழிவது நிச்சயம் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு என்று அரசின் மருத்துவ நிபுணர்கள், அறிவியல் ஆலோசகர் குழு பரிந்துரை செய்து வருகிறது.

அதே நேரத்தில் முழு ஊரடங்கை கொண்டு வர மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் முழு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் 2ம் அலை கொரோனா பரவலைத் தொடர்ந்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி இங்கிலாந்திலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தில் 2வது முறையாக முழு ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளனர்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் தங்கள் தொழில் என்ன ஆகும், தங்களுடைய நிலை என்ன ஆகும் என்ற கவலையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு பிறகு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. பல தொழில்கள் 20 சதவிகிதம் அளவுக்குக் கூட விற்பனை குறைந்தது என்று கூறப்படுகிறது. அதன் பிறகு கட்டுப்பாடுகள் வரவே மேலும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கடைகள் நிரந்தரமாக மூடப்படுவதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக பிரிட்டிஷ் ரீட்டெய்ல் கன்சார்டியம் (BRC) தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இங்கிலாந்தும் மீண்டும் தேசிய அளவிலான ஊரடங்கைக் கொண்டு வந்தால் அது மிகப்பெரிய பொருளாதார அழிவுக்குக் கொண்டு போய் விட்டுவிடும் என்று வணிகர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வேலை இழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிட்ஸா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மேலும் 1300 பேரை வேலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இது 1100 பேரை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter