கொரோனா செல்ஃப் ஐசோலேஷன் நாட்கள் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு!

Self isolation, shortened, கொரோனா

கொரோனா தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை 14ல் இருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று குறைந்தும் உயர்ந்தும் ஆட்டம் காட்டி வருகிறது. தடுப்பூசி வந்துள்ள நிலையில் வரும் நாட்களில்தான் அதன் தாக்கம் தெரியவரும்.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வைக்கும் நடைமுறை தற்போது உள்ளது.

இதனால் 14 நாட்கள் தங்களின் சுதந்திரம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று பலரும் வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் எல்லோருக்கும் தொற்று வருவது இல்லை என்பதால் 14 நாட்கள் செல்ஃப் ஐசோலேஷனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதைத் தீவிரமாக பரிசீலித்த அரசு தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கான நாட்களின் எண்ணிக்கையை 14 நாளிலிருந்து 10 நாட்களாகக் குறைந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு வருகிற திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்தின் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா: லண்டன்: மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை!

ஏற்கனவே 10 நாள் குவரான்டைன் விதிகள் வடக்கு அயர்லாந்தில் இருந்தாலும் தற்போது வெளியாகி உள்ள புதிய அறிவிப்பு நான்கு நாடுகளுக்கும் பொருந்தும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் என்.ஹெச்.எஸ் மொபைல் ஆப்பில் 14 நாள் குவாரன்டைன் என்பது வருகிற வியாழக்கிழமை வரை செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகே அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து கொண்டே வந்தாலும் லண்டன் மற்றும் கிழக்கு இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

லண்டனில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தாவிட்டால் மிகப்பெரிய தொற்று பரவல் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் செல்ஃப் குவாரன்டைன் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter