காதலை சொல்ல நினைத்து வீட்டை தீ-க்கு பறிகொடுத்த நபர்! ஷெஃபீல்டில் நடந்த விபரீதம்

வீடு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையிலும் காதலை சொல்லிய ஆல்பர்ட் (Image: ALBERT NDREU / SWNS)

தன்னுடைய காதல் மிகவும் அற்புதமாக இருக்க வேண்டும் இளைஞர் ஒருவர் செய்த செயலால் ஷெஃபீல்டில் வீடு தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷெல்ஃபீல்டில் உள்ள அபேடேல் சாலையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ன்ட்ரூ (26). இவருக்கு ஆன்லைன் சேட்டிங்கில் வலேரிஜா மேடெவிக் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. வலேரிஜாவிடம் தன்னுடைய காதலை சொல்லி, திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று வித்தியாசமான முறையில் கேட்க விரும்பினால் ஆல்பர்ட். தன்னுடைய வீடு முழுக்க மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்களால் இதயம் வரைந்து, பலூன்களை பறக்கவிட்டு வலேரிஜாவை அசத்த நினைத்துள்ளார்.

தீவிபத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட படம். (Image: ALBERT NDREU / SWNS)

ஏற்பாடுகள் எல்லாம் பிரமாதம் என்று தெரிந்ததும் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு காதலி வலேரிஜாவை அழைத்து வர சென்றார். இருவரும் வீட்டுக்கு வந்த போது புகை மூட்டமாக இருந்தது. எரிந்த நாற்றம் அடித்தது. தெற்கு யார்க்க்‌ஷேயர் தீயணைப்பு வீரர்கள் இருந்தனர். கதவைத் திறந்தபோது அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இருப்பினும் அந்த இடத்திலேயே அவர் தன்னுடைய காதலியிடம் என்னைத் திருமணம் செய்துகொள்வாயா என்று ப்ரபோஸ் செய்தார். வீடு எரிந்த துக்கம் இருந்தாலும் அவரும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆல்பர்ட் கூறுகையில், “காதலை சொல்லி திருமணத்துக்கு அனுமதி கேட்க இரண்டு வாரங்களாக திட்டமிட்டேன். நான் செய்யும் காரியத்தில் சொதப்பிவிடக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், ஒட்டுமொத்தமாக வீடே தீப்பற்றி எரியும் என்று எதிர்பார்க்கவில்லை.

வீடு தீப்பிடித்து எரிந்த போதிலும் தன்னுடைய ப்ரபோஸ் செய்யும் முயற்சியை அவர் கைவிடவில்லை. அந்த இடத்தில் முட்டி போட்டு, தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த பரிசு பெட்டியை அவரிடம் கொடுத்த போது வலேரிஜா மெட்விக் உணர்ச்சிப் பெருக்கால் பேச மறந்துள்ளார்.

முற்றிலும் சேதமுற்ற நிலையில் வீடு (Image:
South Yorkshire Fire)

இந்த ஜோடி தற்போது உறவினர்களின் வீட்டில் தங்கி வருகின்றனர். தங்களுடைய குடியிருப்பு சரி செய்யப்பட்டதும் அங்கே திரும்புவார்கள். வீடு தீப்பிடித்து எரிந்ததன் முதலாமாண்டு விழாவுக்கு முன்னதாக அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மெட்விக் இது குறித்து கூறுகையில், “வீடு தீப்பிடித்து எரியலாம். வீட்டில் உள்ள பொருட்களை மாற்றிவிடலாம். ஆனால் இருவரின் அன்பு, காதல் மாறாது” என்றார். அதே நேரத்தில், “ஆல்பர்ட் இன்னும் கொஞ்ச நாளைக்கு பலூன், மெழுகுவர்த்தி பயன்படுத்தக் கூடாது என்ற சொல்லியிருக்கிறேன். விரைவில் அவருடைய பிறந்த நாள் வருகிறது. அப்போது கூட” என்று சொல்லிச் சிரித்தார் மெட்விக்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk