கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு என்று சிறப்புச் சலுகைகள் வழங்கும் திட்டம் இல்லை!

Hospitals overwhelmed, minister, கட்டுப்பாடு, கொரோனா, introduce, vaccine, passport
Cabinet Office minister Michael Gove (Image: EPA/EFE)

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு பப் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கும் தடுப்பூசி பாஸ்போர்ட் சிறப்புச் சலுகை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் வந்துவிட்டது… கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக்கட்ட அனுமதி பெற முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து ஒப்புதல் கிடைத்துவிட்டால் இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற்றுவிட முடியும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்றும், அவர்கள் பொது இடங்களில் எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி இயங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செய்தி வெளியானது.

இதை கேபினட் அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் மறுத்துள்ளார். இது தொடர்பாக பிபிசி-க்கு அளித்துள்ள பேட்டியில் அப்படி ஒரு திட்டம் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தற்போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மிகச் சிறந்த முறையில் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதே நேரத்தில் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்க மறுப்பது என்பது பற்றி தொழில் நிறுவனங்கள் முடிவெடுப்பது அவர்களின் விருப்பமாக இருக்கும்.

இந்த தருணத்தில் எங்களுடைய முழு கவனமும் கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக பொது மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உள்ளது” என்றார்.

இங்கிலாந்தில் இந்த மாதத்தின் மத்தியில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடும் பணி தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி வழங்கும் பணியைக் கண்காணிக்க தனியாக அமைச்சர் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்கும் பணிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter