புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க அதிக கட்டுப்பாடு தேவை! – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா, tougher restrictions
(Image: PA Media)

இங்கிலாந்தில் கொரோனா பரவல் ஆர் நம்பர் 0.7 அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க இன்னும் அதிக கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. இதனால், நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நவம்பரில் ஊரடங்கு இருந்த போது இங்கிலாந்தின் ஆர் நம்பர் ஒன்றுக்கும் கீழ் குறைந்தது. தற்போது ஆர் நம்பர் 0.4 முதல் 0.7 வரை அதிகரித்துள்ளது.

தற்போது இங்கிலாந்தின் ஆர் நம்பர் 1.1ல் இருந்து 1.3 ஆக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆர் நம்பர் அதிகமாக இருந்தால் கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது என்று அர்த்தம்.

நவம்பர் மாதம் ஊரடங்கு இருந்த போது இருந்த பரவலைக் காட்டிலும் தற்போது மூன்று மடங்கு அதிக வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

முதல் வகை முதியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. உருமாற்றம் அடைந்த வைரஸ் கிருமியோ தற்போது இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக பரவுகிறது.

குறிப்பாக 20 வயதுக்கு உட்பட்ட, பள்ளி மாணவர்கள் மத்தியில் புதிய வைரஸ் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

இருப்பினும் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் புதிய வைரஸ் எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக பேராசிரியர் ஜம் நய்ஸ்மித் கூறுகையில், “தற்போது நமக்கு கிடைக்கும் தரவுகள் அனைத்தும் இன்னும் அதிகமான கடின கட்டுப்பாடுகள் நிறைந்த ஊரடங்கு வெகு விரைவில் வேண்டும் என்பதையே காட்டுகின்றன.

நாம் எதையும் வித்தியாசமாகச் செய்யவில்லை என்றால் கொரோனா வைரஸ் அதன் போக்கில் பரவிக்கொண்டேதான் இருக்கும்.

மிக அதிக அளவில் கொரோனா பரவினால் மிக அதிக அளவில் நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிவார்கள். அது மிக அதிக மரணங்கள் நிகழக் காரணமாகிவிடும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter