விஜய் மல்லையாவுக்கு தொடர்புடைய சொத்துகளை விற்க பிரிட்டன் கோர்ட் உத்தரவு

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்குத் தொடா்புடைய ‘ஃபோா்ஸ் இந்தியா’ நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு கப்பலை விற்க பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்றார். ‘ஃபோர்ஸ் இந்தியா’ நிறுவனம் சொகுசு கப்பல் ஒன்றை வைத்திருந்தது. அந்தக் கப்பலின் பெரும்பான்மை பங்குதாரா்களாக விஜய் மல்லையாவும், அவரின் மகன் சித்தார்த் மல்லையாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனின் தாமஸ் குக் ட்ராவல்ஸ் வீழ்ச்சி : இந்தியாவுக்கு பாதிப்பா?

அந்த சொகுசு கப்பலை வாங்குவதற்காக கத்தார் தேசிய வங்கியில் அவா்கள் கடன் பெற்றிருந்தனர். இந்தக் கடனுக்கு விஜய் மல்லையா உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், சித்தாா்த் மல்லையா அந்தக் கடனை உரிய நேரத்தில் செலுத்தாததைத் தொடா்ந்து, கத்தாா் தேசிய வங்கி பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

சித்தாா்த் மல்லையா சுமாா் ரூ.40 கோடி கடன் பெற்றிருந்ததாக அந்த வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்டவா் (சித்தாா்த் மல்லையா) பெற்ற கடனுக்கு விஜய் மல்லையா உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் ஆஜராகவில்லை. மனுதாரரின் (கத்தாா் தேசிய வங்கி) வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்துள்ளது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில்

குற்றஞ்சாட்டப்பட்டவா் பெற்ற கடனுக்காக, அவருக்குச் சொந்தமான சொகுசு கப்பலை விற்க உத்தரவிடப்படுகிறது. அந்தக் கப்பலை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையின் மூலம் கடனாக அளித்த ரூ.40 கோடியை வட்டியுடன் மனுதாரா் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சொகுசு கப்பலை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை விஜய் மல்லையாவுக்குக் கடனளித்த மற்ற வங்கிகளும் பங்கு கோர விரும்பினால், அது தொடா்பாக 6 முதல் 10 வாரங்களுக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.