குவாரன்டைன் விதியை மீறிய 4200 பேர் மீது நடவடிக்கை! – போக்குவரத்து செயலர் அதிரடி

போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Image: PA)

லண்டன், 28 ஆகஸ்ட் 2020: இங்கிலாந்தில் 14 நாள் குவாரன்டைன் விதிமுறைகளை மீறி பொது இடங்களுக்கு வந்ததாக 4200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு இங்கிலாந்துக்கு திரும்பும் பயணிகளுக்கு 14 நாள் குவாரன்டைன் எனப்படும் சுய தனிமைப்படுத்தல் நடைமுறையில் உள்ளது. இதை மீறுபவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மதிக்காமல் இங்கிலாந்தில் 4200 பேர் வெளியே நடமாடி உள்ளதா தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல் அடிப்படையில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து ஸ்விச்சர்லாந்து, ஜமைக்கா, செக் குடியரசு ஆகிவை நீக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி இந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் குவாரன்டை விதிகள் பொருந்தும். இந்த உத்தரவு நாளை (சனிக்கிழமை) காலை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த சூழ்நிலையில் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு மாதத்தில் ஏராளமானோர் குவாரன்டை விதியை மீறியிருப்பது அரசுக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் பற்றிய தகவல் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது அவர் கூறியிருப்பது தவறிழைத்தவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுதுத்தியுள்ளது..

இன்று (வெள்ளிக்கிழமை) டாக் ரேடியோவுக்கு அவர் அளித்த பேட்டியில், “14 நாள் குவாரன்டைன் விதியை மீறியது மட்டுமல்ல, சிலர் தாங்கள் பாதுகாப்பு பட்டியலில் உள்ள நாட்டுக்குத்தான் சென்றோம் என்ற தவறான தகவலையும் அளித்துள்ளனர். இவர்கள் ஆபத்திலிருந்து தப்பிவிட்டதாக நினைக்கின்றனர்… உண்மையில் அப்படி இல்லை. குவாரன்டைன் விதியை மீறுவதற்கு வெறும் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்ல… உங்கள் மீது நீங்களே கிரிமினல் ரெக்கார்டை உருவாக்குகின்றீர்கள். மற்றவர்களுக்கும் கொரோனா ஆபத்தை உருவாக்கியுள்ளீர்கள்” என்றார்.

பாதுகாப்பான நாடுகள் பட்டியலை இங்கிலாந்து நிலைமைக்கு ஏற்ற மாற்றி அமைத்து வருகிறது. இது குறித்து பயண ஏற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில்,  “சமீபத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் போர்ச்சுக்கல் சேர்க்கப்பட்டது. தற்போது அங்கும் நோய் அறிகுறி அதிகரித்து வருவதால் அந்த நாடும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படலாம்.

இந்தாலி இன்னும் பசுமை மண்டலத்தில்தான் இருக்கிறது. அங்கும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசு கடைசி நேரத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் மாற்றம் செய்வதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk