குவாரன்டைஸ் லிஸ்டில் வேறு சில நாடுகளை சேர்க்கவும் தயங்க மாட்டோம்! – ரிஷி சுனக் அதிரடி

(Image: independent.co.uk)

வேறு சில வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்க வருபவர்களுக்கு குவாரன்டைன் நிபந்தனைகள் விதிக்க அரசு தயங்காது என்று சான்ஸ்லர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. இதனால் குவரன்டைன் விதிகள் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட பல நாடுகளுக்கு தற்போது குவாரன்டைன் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பெயினில் இருந்து வருபவர்கள் 14 நாள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவாரன்டைன் விதிகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் நிதித்துறை  சான்ஸ்லர் ரிஷி சுனக் பதில் அளித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “பயண குவாரன்டைன் பட்டியலில் மேலும் புதிய நாடுகளை சேர்க்க அரசு தயங்காது. டவுனிங் ஸ்ட்ரீட் தொடர்ந்து நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து வருகிறது. கொரோனா அச்சம் உள்ளதால் மக்கள் இது போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதைப் பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

பெல்ஜியத்தில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 49.2 என்ற அளவில் தொற்று உள்ளது. இங்கிலாந்தில் இது 14.3 ஆக உள்ளது. எனவே, பெல்ஜியம், அன்டோரா, பஹாமாஸ் ஆகிய நாடுகளுக்கு மிக அவசியம் தேவை என்றால் மட்டுமே செல்லும்படி இங்கிலாந்து வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரத்தில் பிரான்சில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 23.4 என்ற அளவில் உள்ளது. வியாழக்கிழமை ஒரே நாளில் 1600 பெருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினைக் காட்டிலும் குறைவு என்றாலும் குவாரன்டைன் விதிவிலக்கு பட்டியலில் இருந்து பிரான்ஸ் நாடு நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் இந்த பட்டியலில் சேர்க்கப்படுமா என்று ரிஷியிடம் கேட்ட போது, “அரசு தொடர்ந்து கண்காணித்து, முடிவுகளை மறு பரிசீலனை செய்து கொண்டே இருக்கிறது. விடுமுறை பயணம் மேற்கொள்பவர்கள் அரசின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கண்காணித்து, அதன் அடிப்படையில் சரியான முடிவெடுக்கக் கேட்டுக் கொள்கிறேன். சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk