ஃபைசர் தடுப்பூசியால் அலர்ஜி பிரச்னை வரலாம்! – புதிய எச்சரிக்கை

Allergy warning vaccine, தடுப்பூசி, கொரோனா

ஃபைசர் பயோஎன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அலர்ஜி (ஒவ்வாமை)  பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் ஃபைசர் பயோஎன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

முதல் நிலைக் களப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளான நேற்று ஆயிரக் கணக்கானவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட என்.ஹெச்.எஸ் மருத்துவப் பணியாளர்கள் இரண்டு பேருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் இருவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் தற்போது நலமுடன் உள்ளதாகவும் என்.ஹெச்.ஹெச் இயக்குநர் ஸ்டீபன் பவுன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் ஒவ்வாமை (அலர்ஜி) பிரச்னை உள்ளவர்கள் ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டாம் மெடிசின்ஸ் அன்ட் ஹெல்த்கேர் ப்ராடெக்ட்ஸ் ரெகுலேட்டரி ஏஜென்ஸி (MHRA) தெரிவித்துள்ளது.

இதை படிச்சீங்களா… ஆக்ஸ்ஃபோர்டின் கொரோனா தடுப்பூசி மிகவும் ஆற்றல் மிக்கது! – ஆய்வில் தகவல்

புதிய தடுப்பூசிகள் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களுக்கு சருமத்தில் நமைச்சல், மூச்சுத் திணறல் சில சமயங்களில் ரத்த அழுத்தத்தைக் கூட குறைத்துவிடுகிறது. இருப்பினும் மிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான அனாபிலாக்ஸி பாதிப்பு அளவுக்கு இது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி போட்டால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் என்று இல்லை. இது மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு ஏற்படலாம்.

இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் இதை போட்டுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம் என்று MHRA தலைவர் ஜூன் ரெயின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி ஆயிரக் கணக்கானவர்களுக்குப் போடப்பட்டது. இதில் இரண்டே இரண்டு பேருக்குத்தான் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அதுவும் உயிருக்கு ஆபத்தில்லாத சாதாரண ஒவ்வாமை பிரச்னைதான் ஏற்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதைக் காட்டிலும் ஒரு சிலருக்கு ஆபத்தில்லாத ஒவ்வாமை ஏற்படுவது பெரிய விஷயமில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter