நாட்டிங்ஹாம்ஷையரில் வெள்ளிக்கிழமை 3ம் நிலை கட்டுப்பாடு அமல்!

Corona, Nottinghamshire, நாட்டிங்காம்ஷையர், கொரோனா, கட்டுப்பாடு
(Image: Nottingham Post)

வருகிற வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நாட்டிங்ஹாம்ஷையரில் ( Nottinghamshire ) மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமலாக உள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து நாட்டிங்ஹாம்ஷையரில் வருகிற வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கொரோனா 3ம் நிலை கட்டுப்பாடு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது முழு மாவட்டத்திலும் அமலாகும் என்று ஒரு நகர சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிங்ஹாம், ரக்ளிஃப், கெட்லிங் மற்றும் ப்ரோக்ஸ்டோவ் ஆகியவை மூன்றாம் நிலை கடும் கட்டுப்பாடுக்கு வியாழக்கிழமை முதல் செல்ல உள்ளன.

மான்ஸ்பீல்ட், ஆஷ்பீல்ட், பாசெட்லா மற்றும் நெவார்க், ஷெர்வுட் ஆகியவையும் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஷ்பீல்ட் மாவட்ட கவுன்சில் தலைவர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 3ம் நிலை கட்டுப்பாட்டுக்குச் செல்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன் கிழமை உள்ளூர் நகர சபை நிர்வாகிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது.

இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 முதல் நாட்டிங்ஹாம்ஷையர் முழுவதும் மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமலாகிறது.

இங்கிலாந்தின் அதிக கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளுள் ஒன்றாக நாட்டிங்ஹாம் உள்ளது. இருப்பினும் கடந்த வாரத்தில் தொற்று பரவல் விகிதம் குறைந்தது.

தற்போது இந்த நகரம் தொற்று பரவல் வீதம் அடிப்படையில் நாட்டின் 26வது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 439.8 என்ற அளவில் தொற்று பரவல் உள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அது 643.4 ஆக இருந்தது.

மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரவே 3ம் நிலைக்குச் செல்கிறது.

ஏற்கனவே, லிவர்பூல் நகர பகுதி, கிரேட்டர் மான்செஸ்டர், லங்காஷையர், தெற்கு யார்க்‌ஷையர், வாரிங்டன் ஆகியவை மூன்றாம் நிலை கட்டுப்பாட்டில் உள்ளன. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நாட்டிங்ஹாம்ஷையரும் இந்த பட்டியலில் இணைய உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter