கொரோனாவுக்கு 15 பேர் பலி… இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வாரிங்டனில் 3ம் நிலை கட்டுப்பாடு அமல்!

Warrington, கட்டுப்பாடு, கொரோனா
(Image: Zenpix / thesun.co.uk)

மருத்துவமனையில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வாரிங்டன்னில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கொரோனா 3ம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக வாரிங்டன்னில் அடுத்த வியாழக்கிழமை கொரோனா 3ம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது அங்கு அதிக அளவில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருவதாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதைத் தொடர்ந்தும் உள்ளூர் நிர்வாகம் எடுத்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு 12.01க்கு ஊரடங்கு அமலுக்கு வரும் என்ற அறிவிப்பை மாற்றி, செவ்வாய்க்கிழமை காலை 12.01க்கு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிங்டனுக்கு அருகில் உள்ள லிவர்பூல் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டரில் மூன்றாம் நிலை ஊரடங்கு அமலில் உள்ளது. வாரிங்டனிலும் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 3ம் நிலை ஊரடங்குக்குச் செல்வதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாரிங்டன் மூன்றாம் நிலை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் செல்வதால் இங்கும் பப், பார்கள் மூடப்படும்.

இது குறித்து உள்ளூர் கவுன்சில் தலைவர் ரஸ் போடன் கூறுகையில், “இது கட்டாயமான தேவையான நடவடிக்கை” என்றனர்.

வாரிங்டன்னில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 354 பேருக்கு தொற்று பரவல் வேகம் உள்ளது. தேசிய சராசரி பரவல் 190தான். வாரிங்டன் 3ம் நிலைக்கு செல்ல உள்ளதைத் தொடர்ந்து அதற்கு 5.9 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கப்பட உள்ளது.

அடுத்ததாக, நாட்டிங்ஹாமிலும் 3ம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அங்கு தொற்று வேகம் குறைந்தாலும் தீவிர சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதைத் தொடர்ந்து 3ம் நிலை அறிவிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை படிக்கலாமே: மான்செஸ்டரில் வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்த நபருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter