கூடுதல் கட்டுப்பாட்டை ஆதரிக்கத் தயார்! – லிவர்பூல் மேயர் அறிவிப்பு

support, Covid, restrictions, கட்டுப்பாடு, லிவர்பூல்
லிவர்பூல் மேயர் (Image: BBC)

இங்கிலாந்தில் தற்போது உள்ள மூன்று நிலை கொரோனா கட்டுப்பாட்டை விட கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்ட நான்காவது நிலை என்று ஒன்று இருந்தால் அதை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக லிவர்பூல் மேயர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் மூன்றாம் நிலை கொரோனா கட்டுப்பாடு முதலில் அறிமுகம் செய்யப்பட்டது லிவர்பூலில்தான். மேயராக உள்ள ஜோ ஆண்டர்சனின் சகோதரர் கொரோனாவுக்கு பலியானவர்.

இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்கு இவர் ஆதரவு அளித்து வருகிறார். தொழிலாளர் கட்சி மேயராக இருந்தாலும் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் அதை ஆதரிக்கத் தயார் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிபிசி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “லிவர்பூல் குடும்பங்கள் மற்றும் வணிகங்களில் இந்த வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பாதிக்கப்பட்ட மக்களிடம் மிகப்பெரிய இழப்பையும் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களில் மிகப்பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை வேகமாக் குறைக்க தற்போது உள்ளதைக் காட்டிலும் விரைவான திட்டம் ஒன்று இருந்தால் அதை ஆதரிக்கத் தயாராக உள்ளேன்.

இருப்பினும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் நிலை கட்டுப்பாடு எப்படி செயல்படுகிறது என்பதைக் காண காத்திருக்கிறேன். 14, 16 நாட்களில் 3ம் நிலை கட்டுப்பாட்டின் பலன்களைப் பற்றி ஆய்வு செய்ய உள்ளேன்” என்றார்.

தன்னுடைய சகோதரரின் இறப்பு தனக்கு மிகப்பெரிய இழப்பு, அடி என்றும் திடீரென்று அவரது உடல்நிலை மோசமானது, இறுதியில் சந்தித்து குட்பை சொல்லக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

நாங்கள் அவரை கட்டிப்பிடிக்கவோ, அவருடன் இருக்கவோ முடியவில்லை. மக்கள் எதிர்கொள்ளும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அரசு கொரோனா பற்றி தவறான, பொய்யான தகவலை பரப்புகிறது என்று கூறுபவர்கள் மீது விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. தடுப்பூசி வரும் வரை இந்த வைரஸ் நம்மை விட்டு நீங்காது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter