முதலில் 1.5 கோடி பேருக்குத் தடுப்பூசி… அதன் பிறகு கட்டுப்பாடுகளுக்கு முடிவு! – வெளியான தகவல்

corona vaccine effective, கொரோனா, தடுப்பூசி
(Image: Sven Simon/DPA)

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வாய்ப்புள்ள 1.5 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்கிவிட்டு அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்று அரசு  முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்தின் பெரும்பகுதிகள் நான்காம் நிலை எனப்படும் மிகக் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் முழு இங்கிலாந்தும் நான்காம் ;நிலைக்கு வரும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்து,  வேல்ஸில்  கடும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.  வடக்கு அயர்லாந்தில் ஆறு வார ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த சூழலில் இங்கிலாந்தில் எப்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்பது குறித்து  அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில்  தற்போது ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசி மக்களுக்குப் போடப்பட்டு வருகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு நாளை (திங்கட்கிழமை) ஒப்புதல் வழங்கப்படும் என்று  கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா: பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு – அமெரிக்க அரசு

இதன் பிறகு, இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அபாயம் உள்ள 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி  வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விரைவாக தடுப்பூசி போடப்பட்ட பிறகு மற்றவர்களுக்கும்  போடப்படும். அதற்குள்ளாக கொரோனா தொற்று காரணமாக  உயிரிழப்பு அபாயம் குறைந்துவிடும். அதன்  பிறகு கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்துவது என்று அரசு முடிவெடுத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

1.5 கோடி பேருக்குத் தடுப்பூசி பிப்ரவரி மாதத்துக்குள் போட்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே கட்டுப்பாடுகள் தளர்வு இருக்கும்.

10 கோடி ஆக்ஸ்போர்டு பல்கலைக்  கழகத்தின் தடுப்பூயை இங்கிலாந்து  அரசு வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter